அலங்காநல்லூரில் அரசு வணிக வங்கியில் இணையதள சேவை பாதிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி

அலங்காநல்லூரில் அரசு வணிக வங்கியில் இணையதள சேவை பாதிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி
X

அலங்காநல்லூரில் வங்கி சேவை பாதிக்கப்பட்டதால் காத்திருந்த  வாடிக்கையாளர்கள்

காலை 10 மணி முதல் இன்டர்நெட் வேலை செய்யாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தனர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வங்கியில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமப்பட நேரிட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது .தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே, உள்ள இந்தியன் வங்கி காலை 10 மணி முதல் இன்டர்நெட் வேலை செய்யாமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தனர். இதனால் வாடிக்கையாளர் தனியார் வங்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கான காரணம் குறித்து வங்கி அலுவலரை அணுகி கேட்டபோது, இணையதளம் பிரச்னை நெட்வொர்க் ப்ராப்ளம் என்று கூறுகின்றனர். இதனால், பல பணிகள் பாதித்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாலித்தார். ஆகவே, இந்தியன் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!