மதுரை அருகே சர்வதேச துயர் துடைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை அருகே சர்வதேச துயர் துடைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
X

மதுரை மாவட்டம்,  சோழவந்தானில் நடைபெற்ற துயர் துடைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


தீயணைப்புத் துறை அலுவலர்கள் பேரிடர் மேலாண்மை பற்றி பயிற்சி முறைகளை செய்து காட்டினர்

மதுரை அருகே சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு துடைப்பு முன்னிட்டு, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் தணிக்கும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் சோழவந்தானில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். தீயணைப்பு துறை அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் பேரிடர் மேலாண்மை பற்றி பயிற்சி முறைகளை செய்து காட்டினர். சோழவந்தான் காவல் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். விவேகானந்தர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்அசோக் குமார், ரமேஷ் குமார், ராஜ்குமார், ரகு, தினகரன் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். விவேகானந்தர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business