திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு கருத்தரங்கம்
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ,ஆசிரியர் மேம்பாட்டு தர கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவேடகம்.விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
மதுரைதிருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக்குழுவின் சார்பாக 08.04.2024, திங்கள் கிழமை இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு’ நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் நூலகர் முனைவர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விவேகானந்தர் கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கல்வித் தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த பேராசிரியரும் ஆகிய முனைவர் ராமகணேசன் "ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு திறன்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
கல்லூரியின் செயலாளர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சரவணக்குமார் தொகுத்து வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu