மேலக்காலில் பாஜக தொழிற்பிரிவு சார்பில் சுதந்திர தினவிழா

மேலக்காலில் பாஜக தொழிற்பிரிவு சார்பில் சுதந்திர தினவிழா
X

தொழில்துறை பிரிவு மாவட்டச்செயலாளர் முருகேசன் கொடியேற்றி வைத்தார்

மேலக்கால் கிராமத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக பாஜக தொழில்துறை பிரிவு சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், மேல கால் கிராமத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக பாஜக தொழில்துறை பிரிவு சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தை ஒட்டி,தமிழக பாஜக தொழில்துறை பிரிவு சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்துறை பிரிவு மாவட்டச்செயலாளர் முருகேசன் கொடியேற்றி வைத்தார். விவசாய பிரிவு மாநில தலைவர் மணி முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட போராட்ட வீரர்கள் நினைவு கூறினார்.தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில், நிர்வாகிகள் நார்த்தொழிற்சாலை முருகேசன். காமாட்சி ராஜா பர்னிச்சர் ராஜாராமன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்