பாலமேடு பேரூராட்சியில் சுதந்திர தின விழா

பாலமேடு பேரூராட்சியில் சுதந்திர தின விழா
X

பாலமேடு பேரூராட்சியில், 75 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அலுவலகம் முன்பாக பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார்

பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார்

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சியில் சுதந்திர தினவிழாவைமுன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

பாலமேடு பேரூராட்சியில், 75 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அலுவலகம் முன்பாக பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார். இதில், பேரூராட்சி செயல் அலைவலர் தேவி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு, மேலும் மரக்கன்றுகள் நடவு செய்தனர். இதேபோன்று, அலங்காநல்லூர் பேரூராட்சி வளாகம் முன்பாக தலைவி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தேசியக் கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் சாமிநாதன், பேரூராட்சி செயலாளர் ஜீலால் பானு, கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீ சுதா முருகன் தேசிய கொடி ஏற்றி, அதனைத் தொடர்ந்து, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், துணைத் தலைவர்ஜெயகணேசன், ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பாஸ்கரன், வேளாண்மை துறை அலுவலர்கள் தேவேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதில், சுகாதார மற்றும் குடிநீர் பிரச்னைகளை சரி செய்ய வேண்டியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோன்று,15 பி . மேட்டுப்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் தீபா நந்தினி மயில்வீரன் தேசிய கொடி ஏற்றி தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தில் சாலை வசதி மயான வசதி குடிநீர் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பெரிய ஊர் சேரி அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில் துணைத் தலைவர் பாண்டியம்மாள், வாடிப்பட்டி நீதிமன்ற இலவச சட்ட முகாம் சார்பாக வக்கீல் ராமசந்திரன் கலந்துகொண்டுநடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கன்மாய்க்கரையில், சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ,சின்ன ஊர் சேரி மயானம் சீரமைக்க வேண்டியும்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஆதனூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற த்

தலைவர் சத்யா செந்தில் குமார் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். கிராம சபை கூட்டத்தில், துணைத் தலைவர் அழகர் பிள்ளைஊராட்சித்செயலாளர் மாணிக்கம் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, முடுவார் பட்டி ஊராட்சியில், நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ஜெயமணி அசோகன், அலுவலகம் முன்பாக தேசிய கொடி ஏற்றினார்.

தொடர்ந்து ,கிராம சபை கூட்டத்தில் உமா முருகேசன், ஊராட்சி செயலாளர் செல்வமூர்த்தி கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோன்று தேவசேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி தேசிய கொடி ஏற்றினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கண்ணன் உள்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டு ,

கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோன்று, அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பாக ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு தேசியக்கொடி ஏற்றினார் .இதில் ,ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிரவன் உள்பட ஒன்றியக்கவுன்சிலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா