சோழவந்தான் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
சோழவந்தான் பகுதிகளில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சோழவந்தான் பகுதிகளில் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை ஒட்டி பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன் தேசிய கொடி ஏற்றி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், சுகாதார ஆய்வாளர், முருகானந்தம் கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பல கலந்து கொண்டனர். இதேபோல் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாகிகள் மணி முத்தையா வள்ளி மயில் தலைமை ஆசிரியர் தீபா ராகிணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மேலக்காலில் பாஜக தொழில்துறை பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பாஜக தொழில் துறை பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
நார் கம்பெனி உரிமையாளர் முருகேசன் காமாட்சி ராஜா பர்னிச்சர் ராஜாராமன், பில்டிங் காண்ட்ராக்டர் குட்டி பாண்டி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முள்ளிகுளம் ஊராட்சி சார்பில் விநாயகர் படம் காலனியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தேசியக்கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கேபிள் ராஜா செயலாளர் மனோ பாரதி ஓவியர் தவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரமங்கலம் ஊராட்சியில் 25 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் செல்வி செயலாளர் பால்பாண்டி எட்டூர் கமிட்டி ஜெயபால் பிடி மோகன் முன்னாள் கவுன்சிலர் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலைக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
துணைத் தலைவர் பத்ரகாளி சுரேஷ் செயலாளர் பாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காடுவெட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. .மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் துணைத் தலைவர் சித்தாண்டி, ஊராட்சி செயலாளர் விக்னேஷ், கிராமத்தின் சார்பாக சுபேத வாகனம் ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தி ராஜா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர்.கலந்து கொண்டனர்.
கீழமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் சூரியகுமார், ஊராட்சி செயலாளர் கார்த்தி கிராமத்தின் சார்பாக சாகுல் ஹமீது, சண்முகநாதன், மாடசாமி, எஸ். என். பி. இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் மாரியம்மன் கோயில் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது .செயல் அலுவலர் இளமதி தேசிய கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தினார் .பணியாளர்கள் பூபதி. வசந்த். கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu