சோழவந்தான் அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சோழவந்தான் அருகே குருவித்துறை பெருமாள் கோயிலில்சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு:
சோழவந்தான் அருகே,கோவில் குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு:
சோழவந்தான் அருகே, கோவில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடந்தது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கிராமத்திற்கு, சித்திரத வல்லபபெருமாள் கிராமத்தில் உள்ள தானத்தில் எழுந்தருளி இங்கு மூன்று நாள் திருவிழா கிராமத்தார்கள் சார்பாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடை பெறக்கூடிய வைகுண்ட ஏகாதசி திருவிழா கோவில் வளாகத்தில் நடந்தது. உபயோதாரர் கன்னியப்பன் முதலியார் குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். கூடுதல் பொறுப்பு நிர்வாக அதிகாரி சரவணன், பணியாளர்கள் நாகராஜ், மணி ஏற்பாடுகளை செய்திருந்தனர் . அர்ச்சகர்கள் சடகோபன் என்ற பாலாஜி ரங்கநாதன், பாலாஜி சௌமிய நாராயணன், கோவிந்த மூர்த்தி ஆகியோர் அபிஷேகங்கள் செய்தனர்.
வருவாய்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோரும் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில்,காடுபட்டிபோலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி எப்போது, அதன் முக்கியத்துவம் என்ன, விரதம் இருக்கும் முறை, சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு.
ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி எப்போது, அதன் முக்கியத்துவம் என்ன, விரதம் இருக்கும் முறை, சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கங்கள் இதோ.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசி திதியில் விரதம் தொடங்கி, துவாதசி திதியில் முடிக்க வேண்டும் என்பதுவிதி. எனவே வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் இன்றே விரதத்தை தொடங்க வேண்டும். இன்று பகல் பொழுது வரை உணவு உட்கொள்ளலாம். இரவு முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசாமி கோலிவலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu