சோழவந்தானில், பள்ளிகளுக்கு இடையிலான கபாடி போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

சோழவந்தானில், பள்ளிகளுக்கு இடையிலான கபாடி போட்டி; வென்றவர்களுக்கு பரிசு
X

சோழவந்தானில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையிலான கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

சோழவந்தானில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையிலான கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சோழவந்தான், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மைதானத்தில் நடந்த எம் எஸ் எஸ் சி வடக்கு மண்டல போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் 2023 2024 கபடி டோர்னமெண்ட் 14,17,19 வயதுக்கு உட்பட பிரிவில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குகபடி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இரண்டு நாட்களாக நடந்தது.

கல்விக் குழும பள்ளிகள் தலைவர் டாக்டர் செந்தில்குமார் நடந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ விழாவில் கலந்து கொண்டு பாராட்டி பேசினார். இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு நடந்த கபடி போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்ட போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணியினருக்கு முதல் பரிசு, அழகர்கோவில் பி.எஸ்.எல்.வி அணியினருக்கு இரண்டாவது பரிசும்,

17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் போட்டியில் அழகர்கோவில் பி.எஸ். எல்.வி அணியினருக்கு முதல்பரிசு, கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணியினருக்கு இரண்டாவது பரிசும்,

19 வயதுக்கு உட்பட மாணவர்களுக்கு நடந்த போட்டியில், அழகர் கோவில் பி எஸ் எல் வி அணியினருக்கு முதல்பரிசு, கல்வி சர்வதேசபொதுப்பள்ளி அணியினருக்கு இரண்டாவது பரிசு என, பரிசுகள் வழங்கினார்.

இதேபோல், இரண்டாவது நாள் மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அம்பிகை மீனா மாணவிகளுக்கு கபடி போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு நடந்த கபடி போட்டியில், மதுரை ராயல் வித்யாலயா அணியினருக்கு முதல்பரிசு, கல்வி சர்வதேசபொதுப்பள்ளி அணியினருக்கு இரண்டாவது பரிசும்,

17 வயதுக்குட்பட்ட மாணவிக்கு நடந்த கபடி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணியினருக்கு முதல் பரிசு,டெல்லிபப்ளிக்ஸ்கூல் அணியினருக்கு இரண்டாவது பரிசும்,

19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு நடந்த கபடி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணியினருக்கு முதல் பரிசு, அழகர்கோவில் பி.எஸ்.எல்.வி அணியினருக்கு இரண்டாவது பரிசு என, பரிசுகள் வழங்கினார்.

முதல்வர் ஜூடி, உதவிதலைமை ஆசிரியர்கள் அபிராமி,டயானா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business