அலங்காநல்லூர் பேரூராட்சியில் போட்டியிட்ட கணவன்-மனைவி வெற்றி

அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவன்-மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியின்5வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ், 4 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி ரேணுகா ஈஸ்வரி ஆகிய இருவரும் வெற்றி பெற்று உள்ளனர். ஒரே பேரூராட்சியில் கணவனும் மனைவியும் ஒரே கட்சியில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!