மதுரை அருகே பலத்த மழை: ஆயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

மதுரை அருகே பலத்த மழை: ஆயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
X

மதுரை அருகே பலத்த மழையால் இடிந்து தரைமட்டமான கோழிப்  பண்ணையில்  இருந்த கோழிகள் இறந்தன.

அலங்காநல்லூர்,செல்லணக்கவுண்டன்பட்டியில் வீசிய சூறாவளி காற்றால் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை இடிந்து தரைமட்டமானது.

மதுரை, அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்த நிலையில், அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், விளாங்குடி பகுதிகளில், நேற்று இரவு சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இந்த நிலையில், அலங்காநல்லூர் அடுத்த செல்லணக்கவுண்டன்பட்டி பகுதியில், வீசிய சூறாவளி காற்றால் அப்பகுதியில் பிரசாத் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இடிந்து தரைமட்டமானது.

இதில், கோழிப்பண்ணையில், வளர்ப்புக்காக வைத்திருந்த சுமார்1000திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன.ஏற்கெனவே, கோழிப்பண்ணை நடத்துபவர்கள் மிகுந்த நஷ்டத்தில் இருந்து வரும் நிலையில், சூறாவளி காற்றிற்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தது கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே மிகுந்த கவலையை உண்டாக்கியது.

மேலும், கோழி பண்ணை இடிந்து விழுந்து கோழிக் குஞ்சுகள் உயிரிழந்ததால், நஷ்டம் அடைந்தவர்களுக்கு.அரசு உடனடியாக நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!