மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்தபலத்த மழையால் வெப்பம் தணிந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்

மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இரண்டு நாட்களாக வெயில் குறைந்து, குளிர்ந்த காற்றும், அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில், காலை முதல் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. வெப்பம் அதிகரித்த நிலையில், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மாலை நேரத்தில், வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென்று மேகங்கள் திரண்டுவந்த மதுரையில் பல்வேறு பகுதியில் மாட்டுத்தணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் உட்பட பல இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெட்கை குறைந்து, இதமான சூழல் ஏற்பட்டது.மதுரையில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!