குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா ஹோமம் தொடக்கம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா தொடங்கியது
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை யுடன் தொடங்கியது. சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
இதேபோல் நேற்று காலையில், ஸ்ரீதர் பட்டர்,ரெங்கநாதபட்டர்,சடகோபபட்டர்,ஸ்ரீ பாலாஜி பட்டர், ராஜா பட்டர் உட்பட 21 பேர் லட்சார்ச்சனையை நடத்தினர். லட்ச அர்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது. லட்சார்ச்சனையை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன்,செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன்,ரேகா வீரபாண்டி,இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கர்நாடகா கூடுதல் டிஜிபி ஜெயராமன் லட்சார்ச்சனை யில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இவரை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கர்ணன்,தொழிலதிபர் எம்.கே. எம்.ராஜா,மணிவேல் உட்பட பல வரவேற்றனர். சமயநல்லூர் துணைசூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி,முழு சுகாதார பணி செய்திருந்தனர், மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு முகாம் அமைத்திருந்தனர். இன்று லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். இரவு நிறைவு பெற்று.நாளை பகல் 3மணியளவில் பரிகார மகாயாகம் நடைபெறும். 6:10 அளவில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால், குரு பகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும்.
பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறை,சுகாதாரத் துறை,வருவாய் துறை,தீயணைப்புத் துறை,அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோணா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்து உள்ளனர். வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.மதுரை அருகே மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், நவ. 13.ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu