அலங்காநல்லூர் அருகே கிராம சபைக் கூட்டம்:

அலங்காநல்லூர் அருகே கிராம  சபைக் கூட்டம்:
X

அச்சம்பட்டி கிராமசபைக்கூட்டத்தில் மரங்கள் நடுவது பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள்

அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி ஊராட்சியில் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீ சுதா முருகன் தலைமையில் துணைத் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, பற்றாளர் ஜீவராணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மகளிர் சுயஉதவி குழுவினர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு, புவி வெப்பமயமாதலை தடுக்க கிராமத்தில் மரங்கள் நடுவது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி நன்றி கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!