வீடு இழந்தோருக்கு வீடு கட்ட அரசு உதவ வேண்டும்: முள்ளிப்பள்ளம் மக்கள் கோரிக்கை..!
நெடுஞ்சாலைத்துறை இடித்த வீடுகள்
சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்..
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதில்,முழுவதுமாக வீடுகளை இழந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து சமுதாய கூடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி இரண்டு நாட்களாக பொழுதை கழித்தனர்.
இந்த நிலையில், தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் . வருவாய்த்துறையினர், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முழுவதுமாக வீடுகளை இழந்த சுமார் 46 குடும்பங்களுக்கு அருகில் உள்ள காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்டவடகாடு பட்டி பகுதியில் குடும்பத்திற்கு தலா ஒரு சென்ட் இடம் வழங்க வேண்டுமென மதுரை கோட்டாட்சியாருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். கோட்டாட்சியர் , வருவாய் துறையினர் தெரிவித்துள்ள இடத்தை பார்வையிட்டு உரிய முறையில் மனுவை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினர்.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது 40. 50 ஆண்டுகளுக்கு மேலாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். புறம்போக்கில் இருப்பதாக கூறிய அரசு எங்களின் வீடுகளை முழுவதுமாக தரைமட்டமாக்கி விட்டு சென்று விட்டது. ஆகையால், வாழ்வாதாரம் இழந்து வீடுகளை இழந்து நடுத்தெருவில் தவித்து வருகிறோம். எங்களுக்கு, உடனடியாக அரசு இடம் வழங்கி கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் . இதற்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து, விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu