அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை தேவை

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை தேவை
X
அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தல்

விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:மதுரை மாவட்டம் , அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திண்டுக்கல் , மதுரை , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பை அரவைக்கு அனுப்புகின்றனர் .கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு எங்களுடைய முயற்சியால் ரூ 22 கோடி வரை வழங்கப்பட்டது . அதே போல், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கு ஒதுக்கீடாக ரூ. 6 கோடி வழங்கப்பட்டது .

கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் அரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது . தற்போது, 60,000 மெட்ரிக் டன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 2022 - ம் ஆண்டு அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர் .

தற்போது, 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் கரும்பு அறுவடைக்குத்தயாராக உள்ள நிலையில் அந்த கரும்பும் தற்போதைய சூழலில், அலங்காநல்லுார் கொண்டு வரவே அதிக வாய்ப்பு உள்ளது .அரைவை தொடங்காததால் ஆலை உபமின் நிலையம் செயல்படாமல் உள்ளது . இதனால் அரசுக்கு ரூ .110 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கரும்பு விவசயாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து,முன்னாள் முதலமைச்சர்கள் ஒ.பி.எஸ் , இபிஎஸ் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் . எனவே,அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலையை இயக்கட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!