சுகாதார வள மையம் அருகே குப்பைகள்: தேனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

சுகாதார வள மையம் அருகே குப்பைகள்:  தேனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
X

பைல் படம்

தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமன கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில், பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டப்படுவதால், சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர் .

இந்தப் பகுதியில், பெண்கள் சுகாதார வளாகம் உள்ள மெயின் ரோட்டில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால், குப்பைகள் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும் ,இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், ஊராட்சி மன்ற தலைவரோ ஊராட்சி செயலாளரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லையாம். ஊராட்சி மன்றம் சார்பாக, தினசரி வீடுகளுக்கு குப்பை வாங்க வருபவர்கள் வராத காரணத்தால் இந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மதுரை மாவட்ட ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆகையால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளி பெண்கள் சுகாதார வளாகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்.






Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!