சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
X

சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தாளாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தானில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தாளாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்தார். எம் வி எம் குழுமம் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார். நிர்வாகி வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதேபோல், கருப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில், காங் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடினார்கள். செயற்குழு உறுப்பினர் முருகன் காந்தி வேடம், முகமது இலியாஸ், நேரு வேடம் புரிந்து வந்தனர் .

இதில், இளைஞர்கள் துணைத் தலைவர் வரிசை முகமது கிராம கமிட்டி தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் லெக்சர்கான் கணேசன் புரோஸ்கான் சோலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story