மதுரை தேனூர் கிராமத்தில் முன்னாள் மாணவர் சங்கம் இலவச மருத்துவ முகாம்
மதுரை அருகே தேனூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி, முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை தேனூர் கிராமத்தில் சிறப்பாக நடத்தியது. விவேகானந்த கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளர் மற்றும் பொருளியல் துறை தலைவர் பட்டினத்தார் வரவேற்புரை ஆற்றினார். மருத்துவ முகாமை, விவேகானந்த கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த துவங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.
கல்லூரி துணை முதல்வர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். தேனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆதிமூலம், துணைத்தலைவர் பாக்கியலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோலைமுத்து முன்னிலை வகித்தனர். காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் காமாட்சி சந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பெனிபிட் லாரன்ஸ், தயானந்தன், கௌசிக், ராம்பிரகாஷ் மற்றும் செவிலியர்கள் மருத்துவ முகாமில், கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தனர்.விவேகானந்த கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் சாயி சுகுமாரன் நன்றி உரையாற்றினார்.
விவேகானந்த கல்லூரி பேராசிரியர் சதீஷ் பாபு நிகழ்வை ஒருங்கிணைத்தார். விவேகானந்த கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் முரளி கிருஷ்ணன், விவேகானந்த கல்லூரி பேராசிரியர்கள் சந்திரசேகரன், அசோக் குமார், வடிவேல் ராஜா, பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலக உதவியாளர் வீரணன், விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் இந்த மருத்துவமுகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, முன்னின்று கவனித்துக்கொண்டனர். மருத்துவ முகாமில், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, நெடுங்குளம் கிராம மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu