சோழவந்தான் பேரூராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்

சோழவந்தான் போரூராட்சி சார்பில் நடந்த மருத்துவமுகாம்
சோழவந்தான் பேரூராட்சியில் மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று பேரூராட்சி திருமண மண்டபத்தில் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிஷாமகேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்து வழங்கினார்கள்.
செயல் அலுவலர் (பொறுப்பு) ஜீலான்பானு சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதாரஅலுவலர்கள் பிரபாகரன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கான முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் துப்புரவுப் பணியாளர்களுக்கு முதன்மை உடல் பரிசோதனைகள் நடத்தப்படும் மற்றும் நோய்களால் கண்டறியப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதார முகாம்களில் இருந்து வரும் அறிக்கைகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாநில பொது சுகாதாரத் துறை நோயாளிகளின் விவரங்களைக் கொண்டிருக்கும் என்றும், முழு உடல் பரிசோதனைக்கு எப்போது, எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான அட்டவணையை அமைக்கும் என்றும் அவர் கூறினார். இதில் எக்ஸ்ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சோதனை அறிக்கையின் அடிப்படையில், சுகாதாரத் துறை நோயாளிகளுக்கு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது என தமிழக அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu