மதுரை: பிரதமர் மாேடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

மதுரை: பிரதமர் மாேடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
X

மதுரை அருகே பரவை, மெச்சிகுளம் சமுதாயக் கூடத்தில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மதுரை அருகே பரவை, மெச்சிகுளம் சமுதாயக் கூடத்தில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்.

பாரதப் பிரதமரின், 70வது பிறந்த நாளை முன்னிட்டு ,பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹர்ஷினி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச காது-மூக்கு-தொண்டை, சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு ஊசி முகாம் பரவை, மெச்சிகுளம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இதில், மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், மருத்துவர்கள் ரஜினிகாந்த், டாக்டர் சிவசக்தி மகேஷ், மற்றும் மாநில நிர்வாகிகள் ராஜரத்தினம், பேராசிரியர் கதலி ஜி, ஹரிஹரன், நேருநகர் செல்வகுமார், மண்டல் தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சைக்கான மாத்திரை பெற்றுக் கொண்டார்.

முகாமில், 100 நபர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர். இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!