மதுரை அருகே கருப்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்: பெண்கள் பங்கேற்பு

மதுரை அருகே கருப்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்: பெண்கள்  பங்கேற்பு
X

கருப்பட்டி ஆசியன் பள்ளி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஆசியன் பள்ளி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஆசியன் பள்ளி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு,வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிகள் மற்றும் நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் கருப்பட்டியில் நடந்தது. இந்த முகாமிற்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தீபா தலைமை தாங்கினார். வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி ராம்கணேஷ் முன்னிலை வகித்தார்.

நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் வழக்கறிஞர் செல்வகோமதி வரவேற்றார். இதில், வழக்கறிஞர்கள்ராதாகிருஷ்ணன், கண்ணன், உழைக்கும் பெண் தொழிலாளர் சங்கத் தலைவர் பாக்கியலட்சுமி, செயலாளர் நாகலட்சுமி, பொருளாளர் சுதா மற்றும் சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களப்பணியாளர் நந்தினீஸ்வரி நன்றி கூறினார். இம்முகாமில், ஆயத்த ஆடை தயாரிப்பாளர் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story