Former Cm Jayalalitha Anniversary Day சோழவந்தான்அலங்காநல்லூர் அதிமுக சார்பில் ஜெ...நினைவு தினம் அனுசரிப்பு

Former Cm Jayalalitha Anniversary Day  சோழவந்தான்அலங்காநல்லூர் அதிமுக   சார்பில் ஜெ...நினைவு தினம் அனுசரிப்பு
X

மதுரை அருகே சோழவந்தானில் ,ஜெ நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Former Cm Jayalalitha Anniversary Day சோழவந்தான் அலங்காநல்லுாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Former Cm Jayalalitha Anniversary Day

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட ச்செயலாளர் முருகேசன் ஆலோசனையின் பேரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சோழவந்தான் நகர கழகம் சார்பில், வட்ட பிள்ளையார் கோவில் அருகில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தென்கரை திரவியம், சோழவந்தான் நகர் கழக செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் விஜயன்,மாவட்ட பிரதிநிதி முத்து, டீக்கடை ராஜேந்திரன், அரிமா மகேந்திரன், பாலகிருஷ்ணாபுரம் ஈஸ்வரன், பரஞ்சோதி, ஊத்துக்குளி ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் நல்ல முருகன், மீன் ஜெயபாண்டி ,மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், முள்ளி பள்ளத்தில், வாடிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில், ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Former Cm Jayalalitha Anniversary Day



அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே உள்ள, பெரியஊர்சேரி கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.இ.அ.தி.மு.க ஊர்சேரி கிளை கழகத்தின் சார்பாக அம்மாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அலங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞயரணி இணைச் செயலாளர் செந்தில்குமார், கிளைச்செயலாளர் சந்திரன்,ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை,ஒன்றிய க்கவுன்சிலர் ரேவதி,தகவல் தொழில்நுட்ப கிளை செயலாளர் முருகன்,தங்கவேல்,ஆறுமுகம், ஹரிராம், குமரேசன், பூமிநாதன், பழனிசாமி,ஞானசேகர், மகேஸ்வரி,ரேவதி,முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story