சோழவந்தானில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினக் கூட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
சோழவந்தான் சத்திரம் அருகே உள்ள அண்ணா திடலில் ,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு, பேருர் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார் .
பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அய்யப்பன், பாண்டியன் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார்கள்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய ச்செயலாளர் பசும்பொன்மாறன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் ,அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாணவரணி செயலாளர் மருதுபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட பொருளாளர் சோம சுந்தர பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூர் தலைவர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் போடி காமராஜ் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துச்செல்வி, சதீஷ், குருசாமி, சிவா, நிஷா, கௌதம ராஜா, செல்வராணி ஜெயராம் பேரூர் நிர்வாகிகள் சோழவந்தான் ஸ்டாலின் ,சிபிஆர் சரவணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கேபிள் ராஜா, சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, திருவேடகம் ராஜா என்ற பெரியகருப்பன், ஒன்றியக் கவுன்சிலர்கள் வசந்த கோகிலா , சரவணன், ரேகாவீரபாண்டி , கார்த்திகா ஞானசேகரன், தனபால், கண்ணன், மேலக்கால் சுப்பிரமணி, வக்கீல் முருகன், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் எஸ் ஆர் சரவணன், பி ஆர் சி பாலு, சங்கங்கோட்டை சந்திரன், ரவி, சரவணன் உள்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
முடிவில் இளைஞர் அணி முட்டை கடை காளி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu