வாடிப்பட்டியில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி..!

வாடிப்பட்டியில், திமுக முன்னாள்  தலைவர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி..!
X

மாவட்ட திமுக சார்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவு நாள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது

மதுரை புறநகர், வடக்கு மாவட்ட, வாடிப்பட்டியில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி நடைபெற்றது.

வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்

சோழவந்தான் :

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவு நாள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது. பின்னர் பேரணி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ., தலைமை தாங்கி கருணாநிதி உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பேரூர் செயலாளர் மு. பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் திருவேடகம் சிபிஆர் சரவணன் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர்கள் கார்த்திக் லதா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா. பிரகாஷ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ராம் மோகன், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி இளைஞரணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா.மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம் ஒன்றிய பிரதிநிதி எல்.எஸ். அய்யாவு, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பாலசுப்பிரமணியம் மேலக் கால் ராஜா ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி அமைப்பு சாரா அணி அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜி, எம் எஸ் முரளி, வினோத், சங்கங்கோட்டை சந்திரன் ரவி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

நிகழ்ச்சியின் நிறைவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜி. பி. பிரபு நன்றி கூறினார்.

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு மலர் தூவி மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக, முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி, ஜெயராமச்சந்திரன்,குருசாமி, நிஷா கௌதம ராஜா, முத்து செல்வி சதீஷ், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, மாணவரணி எஸ். ஆர் .சரவணன் , சங்கோட்டை சந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பாலசுப்ரமணியன் , சுரேஷ், சங்கர பாண்டி, முதலியார் கோட்டை முருகன், தேங்காய் கடை தவமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story