தொடர் மழையால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்

தொடர்  மழையால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்
X

மதுரை வண்டியூர் கண்மாயில் வெளியேறும் நீர்:

மதுரை நகரில் பலத்த மழையால், பல பகுதிகளில் தெருக்களில் குளம் போல நீர் சூழ்ந்துள்ளன

மதுரை மாவட்டத்தில் பலத்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால், பல கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே பரவை கண்மாய், மாடக்குளம் கண்மாய், நிலையூர் கண்மாய், வண்டியூர் கண்மாய்களுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. வண்டியூர் கண்மாயில், மதகுகளில் தொடர்ந்து மழைநீரானது வெளியேறிக் கொண்டிருக்கிறது. மேலும், மதுரை நகரில் பலத்த மழையால், பல பகுதிகளில் தெருக்களில் குளம் போல நீர் சூழ்ந்துள்ளன.இதனை அகற்றும் பணியில், மதுரை மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!