/* */

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது

HIGHLIGHTS

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை
X

மழையில் நனைந்த நெற்பயிர்கள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கட்டகுளம், முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடியதால், சுமார் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் நேற்று பெய்த கனமழைக்கு சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .

உடனடியாக ,நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று திடீரென கோடை மழை பெய்ததில் ,நெல்களை மூட்டைகளாக பிடித்து வைக்காமல் நெல்லை களத்தில் குவியலாக கொட்டி வைத்து இறுந்ததில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

ஆகையால் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த பகுதியில் தேங்கி இருக்கும் நெல்மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் காடுபட்டி விவசாயி பாலு மற்றும் கட்டக்குளம் விவசாயி தங்கராஜ் கூறும்போது, முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரால், எங்கள் பகுதிகளில் நெல் அறுவடை தாமதம் ஆகியுள்ளது .

நெல் கொள்முதல் நிலையம் அறுவடை முடியும் நாள் வரை செயல்படும் என்று இருந்த வேளையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில், திடீரென நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால், எங்கள் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்தும் அரசு எடுக்க மறுக்கிறது. இதனால், நேற்று பெய்த கனமழை காரணமாக.சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர்.

ஆகையால், மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசம் உடனடியாக தலையிட்டு இங்கு உள்ள நெல் முட்டைகளை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 3 May 2022 12:21 AM GMT

Related News