சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

சோழவந்தானில் மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி பூச்சியம் பாண்டி.

‍சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்களும் திருமணம் முடிந்து தனியாக சென்று விட்டதால், பூச்சிப்பாண்டி, மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

மேலும், விவசாய கூலி வேலை பார்த்து அன்றாடம் ஜீவனாம்சம் நடத்தி வந்த பூச்சிப்பாண்டி, எப்போதும் போல், இன்று காலை விவசாய கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

மதியம் சாப்பிட வர வேண்டியவர் வரவில்லை என்று மனைவி கூறியதன் பேரில், உறவினர்கள் அவர் வேலை பார்க்கும் பகுதிகளுக்கு சென்று தேடி உள்ளனர் .

இந்த நிலையில், மாலை சுமார் 5 மணி அளவில் விவசாய வேலை பார்த்த நிலத்தில் கேட்பாரற்று பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடலை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இருந்து விட்டார் என்று கூறியதன் பேரில், உடலை உடல் கூறு ஆராய்வுக்காக பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர்.

காலையில் கூலி வேலைக்கு சென்றவர் மாலை பிணமாக மீட்டெடுத்ததை கண்டு பூச்சிப்பாண்டியின் மனைவி கதறி துடித்தது அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இது குறித்து, அவரை பிணமாக மீட்டு தூக்கி வந்த உறவினர் கூறும்போது, காலையில் வேலைக்கு கூலி வேலைக்கு சென்றவர் மதியம் சாப்பிட வரவில்லை என்று அவரது மனைவி கூறியதன் பேரில் அவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு சென்று தேடினோம் .

அப்போது, வயல்வெளியில் சுயநினைவற்று கிடந்தார். அவர் கிடந்த இடத்திற்கு அருகில் உயர் அழுத்த மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஆகையால், போலீசார் உரிய விசாரணை செய்து அவரது சாவில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தினசரி கூலி வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவிக்கு ஆதரவு இல்லாததால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் அவர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story