அதிமுக வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் மனு
சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள்
அதிமுக வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் அலுவலரிடம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மனு அளித்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வந்தனர். இந்நிலையில் ஆதிமுக 15-ஆவது வேட்பாளர் ஜனகராஜன் நேற்று சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
இன்று காலை சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலையில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக வேட்பாளர் சிலருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக்கோரியும் தேர்தல் சுமுகமாக நடைபெற அனைத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் அதிமுக தேர்தல் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார். இதனால் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு ஏற்படும் சூழ்நிலையை தவிர்க்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறினார். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில், அதிமுக நிர்வாகிகள் தமிழழகன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் முருகேசன், சோழவந்தான் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் ராமலிங்கம் முனியாண்டி, கேபிள் மணி, சூர்யா மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் நாச்சிகுளம் தங்கப்பாண்டி கருப்பட்டி தங்கப்பாண்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் குருவித்துறை வனிதா தென்கரை ராமலிங்கம்பாசறை நாகராஜ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கச்சிராயிருப்பு முனியாண்டிஉள்ளிட்ட நிர்வாகிகள் சோழவந்தான் பேரூராட்சி 17 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu