சிறந்த கலைஞர்கள் விருதுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த கலைஞர்கள் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுக்கான கலை விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்:
தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும்2002-2003-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயத மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கும்,
2021-2022-ஆம் ஆண்டு முதல் 15 கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மதுரை மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக மதுரை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம்,
தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலை விருதுகள் முறையே...
18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது.
19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருது.
36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருது.
51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருது.
66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது. என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.மதுரை மாவட்டத்தில், தேசிய விருதுகள், மாநில விருதுகள், (கலைமாமணி) மற்றும் ஏற்கெனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.
இதற்கு முன்னர், மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞர்கள் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டு விருது தேர்விற்கு தங்களது ஒப்புதல் வழங்கிட வேண்டும்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்(3) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர் இமண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை -625 002 என்ற முகவரிக்கு 15.07.2023-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும், விவரம் வேண்டுவோர் 0452 2566420 மற்றும் 98425 96563 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu