எடப்பாடி பழனிசாமி தேர்வு: சோழவந்தானில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமி  தேர்வு: சோழவந்தானில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாய கட்சியினர் 

அதிமுகவுக்கு இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்றுவாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் மாநில அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

அருகில் உள்ள.கடைகளில் பேருந்துகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணாபொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் செயலாளர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் நாச்சிகுளம்.தங்கப்பாண்டி கருப்பட்டி தங்கப்பாண்டி ஒன்றிய இளைஞரணி தண்டபாணி ஒன்றிய இணைச் செயலாளர் துரை புஷ்பம்.மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன்மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் பேரூர்கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி