தாெடர் மழை எதிராெலி: சாேழவந்தான் பகுதிகளில் தக்காளி விலை கடும் உயர்வு

தாெடர் மழை எதிராெலி: சாேழவந்தான் பகுதிகளில் தக்காளி விலை கடும் உயர்வு
X
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர்

கடந்த சில தினங்களாக பெய்து வரும்தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நேரத்தில், போதிய விளைச்சல் இல்லாததால் வருமானம் இன்றி தவிப்பதாக தக்காளி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வியாபாரிகள் மூலம் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு வாங்கிச் சென்று அவர்கள் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பதாகவும், அதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர் மழை காரணமாகவும் தக்காளி செடியிலேயே அழுகும் நிலையில் இருப்பதால், போதிய விளைச்சல் இல்லாமல் வருமானம் இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்தும் பத்தாயிரம் ரூபாய் கூட கிடைப்பதில்லை

கோடை காலத்தில்தான் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் அப்போது கிலோ விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை இருப்பதாகவும் ஆனால், மழை காலத்தில் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் மிகவும் வருமானம் இன்றி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அரசு நேரடியாக விவசாயிகளிடம் தக்காளியை ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்றும் வியாபாரிகள் மூலமும் இடைத்தரகர்கள் மூலம் உங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. ஆகையால், அரசு தானாக முன்வந்து விவசாயிகள் நேரடியாக தக்காளிகளை ஏற்றுமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!