Drinking Water Tank Removal சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் தொட்டி உடைப்பு: கவுன்சிலர் புகார்.

சோழவந்தானில் குடிநீர் தொட்டி அகற்றப்பட்ட இடம்
Drinking Water Tank Removal
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஏழாவது வார்டு முதலியார் கோட்டையில் பேரூராட்சி கவுன்சிலராக கணேசன் என்பவர் உள்ளார். இந்நிலையில், முதலியார் கோட்டை கிராம சாவடி அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீண்ட நாளாக செயல்பட்டு வந்த குடிநீர் தொட்டியை,சிலர் உடைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர். மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் புகார் தெரிவித்தார். புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பேரூராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததாக கவுன்சிலர் கணேசன் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கவுன்சிலர்கள் அனுமதியின்றி பேரூராட்சி வார்டுகளில் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது கவுன்சிலருக்கே தெரியாமல் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும், இது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்து குடிநீர் தொட்டியைஇடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பேரூராட்சி பணியாளர்கள் மீது துறை ரீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று கவுன்சிலர் கணேசன் தெரிவித்தார். மேலும், தான் மாற்று கட்சியில் இருப்பதால் பேரூராட்சி ஏழாவது வார்டு பகுதியில் எந்த பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்றும், அவ்வாறு நடைபெறும் ஒரு சில பணிகளும் தனக்கு தெரியாமல் நடப்பதாகவும் புகார் கூறியுள்ளார். ஆகையால்,இது குறித்து விரைவில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu