அலங்காநல்லூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டி: எம்பி திறந்து வைப்பு

அலங்காநல்லூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டி: எம்பி திறந்து வைப்பு
X

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மேல்நிலைத் தொட்டி திறந்து வைத்தார்

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது

அலங்காநல்லூர் அருகே குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், பெரியகுளத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதிக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது .

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மேல்நிலைத் தொட்டி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், பி.டி.ஓ.கதிரவன், ஊராட்சிச் செயலாளர் போஸ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜா, முன்னாள் சேர்மன் ராம்குமார், வக்கீல் ராஜ்குமார், வளையபட்டி மனோகரன் ,கிளைச் செயலாளர்கள் சக்கரவாளம், மேட்டுப்பட்டி மதுரை வீரன், அய்யூர் நடராசன், பெரிய இலந்தைகுளம் செல்வம், கோவிலூர் ஜெகதீசன், பாண்டு, தாமரைபாரி, ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி அலங்காநல்லூர் கவுன்சிலர் நாட்டாமை சுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!