சோழவந்தான் ரயில் நிலைய வளாகத்தில், நாய்கள் தொல்லை..!
ரயில் நிலையத்தில் உள்ள நாய்களின் ஒரு பகுதி.
சோழவந்தான் ரயில்வே பிளாட்பாரத்தில், தெரு நாய்களின் அச்சுறுத்தலால் பயணிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
சோழவந்தான் :
மதுரை மாவட்டம்,சோழவந்தான் ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளங்கள் இரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. 60-க்கு மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இங்குள்ள பிளாட்பாரத்தில், தெருநாய்கள் தஞ்சம் புகுந்ததால் ரயிலில் பயணம் செய்யக் கூடிய பயணிகளும் அந்த பிளாட்பார்தில் நடை பயணம் செய்யக் கூடியவர்களும் அச்சத்துடன் செல்கின்றனர்.
இது மட்டுமல்லாது, ஒரு சில நாய்கள் அவர்களை பின் தொடர்வது பயத்தில் தாங்கள் கொண்டு வரக்கூடிய பொருட்களை கீழே போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது, சில நாய்கள் குரைப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயந்து செல்லக் கூடிய நிலை அங்கு இருக்கிறது. இதனால், சோழவந்தான் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சம் புகுந்த நாய்களை, அப்புறப்படுத்த வேண்டும் என்று, ரயில்வே பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் தெரு நாய்கள் குழந்தைகளை கடித்துக் குதறிய செய்திகளை நாம் படித்துள்ளோம். அதேபோல் ஒரு மாணவியை தெரு மாடுகள் முட்டித் தள்ளிய கோர சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் உள்ள நாய்களால் பயணிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அவைகளை அப்பறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தஉள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu