அலங்காநல்லூர் அருகே பாலமேடு பகுதியில் திமுகவினர் கொண்டாட்டம்

அலங்காநல்லூர் அருகே பாலமேடு பகுதியில் திமுகவினர் கொண்டாட்டம்
X
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பாலமேடு பகுதியில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரை அலங்காநல்லூர் கிழக்கு, மேற்கு மற்றும் பாலமேடு அலங்காநல்லூர் நகர திமுக சார்பில், பாலமேட்டில் உள்ள பேருந்து நிலையம் முன்பாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ் ,பரந்தாமன், நகர செயலாளர் மனோகர வேல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய துணைச் சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சந்தன கருப்பு, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதிஷ், ஆதிராவிடர் நலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத் தலைவர் தங்கம் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளை திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்