சோழவந்தானில், திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தானில், திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X
சோழவந்தானில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பேரூர் செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. 22-ஆம் தேதி முதல் நடைபெறும் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில், நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழுவின் ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், செந்தில் குருசாமி, சிவா, பொருளாளர் எஸ். எம். பாண்டியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஐயப்பன், துணைத் தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பேட்டை பெரியசாமி, சங்கக்கோட்டை சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture