தமிழகத்தில் கள்ளசாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிய விட்டது: முன்னாள் அமைச்சர்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக, எடப்பாடியார் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
வீட்டுக்கு வீடு குழாய் மூலம் டாஸ்மார்க்கை விற்பனை செய்யும் நிலையை கூட திமுக அரசு உருவாக்கும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக, எடப்பாடியார் பிறந்தநாள் விழாவையொட்டி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை, வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன் பட்டி மந்தை திடலில் நடந்தது.
இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.வீ.கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை ஆகியோர் முன்னிலை வைத்தனர்.கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார்.
இந்த விழாவில்,உச்ச நீதிமன்ற ஜல்லிக்கட்டுக்கு தீர்ப்பிற்கு பொதுமக்களுக்கு இனிப்புகளும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி , புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை ,முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்திய அரசியலில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார்.அதனைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர் களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடியார் பெற்று கொடுத்தார்கள்.
கடந்த 2006ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மீதான தடை வந்தபோது அதற்காக தனி சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு திமுக அனுப்பவில்லை. ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்து ,காப்பாற்றப்பட்ட பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தான் உண்டு, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க ஏக மனதாக அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றி அதில் வாக்களிக்கின்ற வரலாற்று பெருமையாக எடப்பாடியார் எங்களை போன்று சாமானிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுத்தார்கள் .
முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடிவாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி, பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடியாருக்கு உண்டு. ஆனால் இன்றைக்கு அந்த கல்வெட்டை மூடி மறைக்க முயற்சி நடைபெற்று வருகிறது .இதை மூடி மறைக்க முடியாது அதிமுகவுக்கு தான் தார்மீக உரிமை உள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜல்லிக்கட்டு போட்டி கலாசாரத்தின் அடையாளமாக உள்ளது என குறிப்பிட்டு, இதில் தலையிட முடியாது என்று கூறி தடை செய்ய மறுத்து விட்டனர் .இந்த தீர்ப்பில் ,தமிழக அரசு சிறப்பான வாதங்களை வைத்துள்ளது, திறமையாக வாதங்களை வைத்துள்ளது என்று ஒரு இடத்தில் கூட நீதியரசர்கள் சொல்ல வில்லை. ஏற்கனவே ,
அம்மா அரசு வைத்த மசோதாவின் வாதங்களை தான் நீதியரசர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்ட வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை காரணம் காட்டி, தற்போதையடி வாசலை மூட நினைத்தால் ,எடப்பாடி யாரின் அனுமதியை பெற்று, வாடிவாசலை காப்பாற்ற மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக போய்விடும். அடுத்து வீட்டுக்கு ,வீடு குழாய் மூலம் கூட டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் கூட நிலை உருவாகும். மக்களை தேடி மது என்ற நிலையை கூட திமுக அரசு உருவாக்கி விடும்.இரண்டு வருட திமுக ஆட்சியில் சாராயம் ,மதுபானங்கள் அதிகரித்து உள்ளது சாராயம் குடித்து இறந்தவருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட்டு சென்ற நாலு பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு நிதி தரவில்லை.
இன்றைக்கு 90 லட்சம் படித்த இளைஞர் உள்ளனர். அவர்களுக்கு எந்த வேலையை உருவாக்காமல் டாஸ்மார்க்கை அதிகரித்து உள்ளனர். கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் உயிரை இந்த அரசு திருப்பித் தர முடியுமா? இதற்கு. தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
இன்றைக்கு கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்து நியாயம் கேட்டு எடப்பாடியார் ஆளுநரிடம் திங்கட்கிழமை மனு கொடுக்கிறார். முதியோர் ஓய்வு திட்டத்தை1,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால், இன்றைக்கு 7 லட்சம் பேருக்கு நிறுத்தி விட்டார்கள். இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாசம் 20 ஆம் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடியாருக்கு கிடைத்திருக்கிறது. கோமாளி அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில்,ஒன்றியச் செயலாளர்கள் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி,ஒன்றிய அவைத் தலைவர் ஆர். எஸ்.ராமசாமி, கச்சைகட்டி ரவி,முன்னாள் கவுன்சிலர் திருப்பதி, சங்கு,பேரூராட்சி கவுன்சிலர்கள் கீதா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேஸ்வரி, பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், முத்து கண்ணன், பொன்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில், பேரூர் அவைத் தலைவர் சந்தனதுரை நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu