ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரிக்கும் திமுக பெண் வேட்பாளர்

ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரிக்கும் திமுக பெண் வேட்பாளர்
X

அலங்காநல்லூர் 8 வது வார்டு திமுக வேட்பாளர் சேஷா ஜெயராமன், ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரித்தார்.  

அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு காளையுடன் வீடுவீடாக சென்று, திமுக பெண் வேட்பாளர் சேஷா வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில், 8 வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் சேஷா ஜெயராமன் போட்டியிடுகிறார். அவர், ஜல்லிக்கட்டு காளையுடன் வீடு வீடாகச் சென்று நூதன முறையில் வார்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு உற்சாகத்துடன் வாக்காளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags

Next Story