அலங்காநல்லூரில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்

அலங்காநல்லூரில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்
X

மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். 

அலங்காநல்லூரில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் விளக்க பொதுக்கூட்டமும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் நடந்தது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், செல்வன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டத்தில், ஆ.ராசா எம்.பி .கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர துணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture