தேமுதிக கட்சி தேர்தல்: சோழவந்தானில் ஆர்வத்துடன் மனு அளித்த நிர்வாகிகள்

DMDK Party | DMDK Latest News
X

மதுரை அருகே சோழவந்தானில், தேமுதிக கட்சி தேர்தல் தொடர்பாக, நிர்வாகிகள் விருப்ப மனுவை பெற்றனர்.

DMDK Party - சோழவந்தானில் தேமுதிக சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு அளித்தனர்

DMDK Party -கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சோழவந்தானில் தேமுதிக சார்பில் நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் கட்சி தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கட்சி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களிடம் தங்களது விருப்ப மனுவினை அளித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தானில், தேமுதிக சார்பில் ஒன்றிய மற்றும் பேரூர் கழகத்திற்கு போட்டியிடும் நிர்வாகிகள் தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளிடம் தங்களது விருப்ப மனுவை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தேமுதிக மாநில துணைச் செயலாளர் அழகர்சாமி மற்றும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் ஆகியோரிடம் கட்சியினர் விருப்பமனுவை வழங்கினர். இதில் ,வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், தெற்கு ஒன்றியச்செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் சோழவந்தான் பேரூர் செயலாளர் ஜெயவீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!