மதுரை அருகே மறவபட்டியில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி..!
மதுரை அருகே, மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.
பாலமேடு அருகே மாவட்ட அளவிலான கபாடி போட்டி
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் டி.எம்.கே ஸ்போர்ட்ஸ் கிளப், ராகவீணா நினைவு குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். சிறப்பாக விளையாடும் அணியினருக்கு ரொக்க பரிசுகளும் சான்றிதழ் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார விளையாட்டு வீரர்களும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட வெளி மாவட்ட அணியினரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக தமிழகத்தில் கிராமங்களில் கோயில் விழாக்கள் நடைபெற்றால் கபாடி போட்டி கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. அதேபோல பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது கோயில் திருவிழாக்களில் ஆட்டம் பாட்டம் மற்றும் ஆபாச நடனங்களை அரங்கேற்றுகின்றனர். கடந்த சில வருடங்களாக கிராமங்களில் கபாடி போட்டி நடத்துவது குறைந்து கொண்டே வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர்.
எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் ஆட்டங்கள் மீது நாட்டம் ஏற்பட்டு கபாடியை மறந்து வருகிறார்கள். ஆனால் கபாடி விளையாட்டும் தற்போது தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு பல விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கபாடி விளையாடுவது உடல் ஆரோக்யம், மூச்சுப்பயிற்சி மனசு ஒருங்கிணைப்பு போன்ற பல ஆரோக்ய நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu