அலங்காநல்லூர் அருகே திமுக சார்பில் பேனா, நோட்டுகள் வழங்கல்
திமுக இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்:
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி,மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, சின்னஇலந்தைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில்,நோட்டு புத்தகம், பேனா, டிபன் பாக்ஸ் உள்ளிட்ட எழுது பொருட்கள் பள்ளி உபகரணங்கள் வழங்கினர்.
தொடர்ந்து, அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சில்வர் தட்டு, மற்றும் இனிப்புகள் வழங்கபட்டது. இதில் ,சுமார் 50க்கும்மேற்பட்ட மாணவ மாண விகளுக்கு, பள்ளி உபகரணங்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி முருகேசன் கார்த்திக் ஏற்பாட்டில், நிர்வாகிகள் வசந்த், ராம்குமார், அஜித்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu