வாடிப்பட்டி அருகே அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

வாடிப்பட்டியில், அதிமுக உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கட்சியினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பழைய உறுப்பினர் அட்டைக்கு பதிலாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் கூடிய புதிய உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பழைய உறுப்பினர் அட்டையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தோடு கையெழுத்தும் இருந்தது. இப்போது, ஓபிஎஸ் புகைப்படத்தையும், கையெழுத்தையும் நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் அதிமுகவில் ஏற்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது ஈபிஎஸ் தரப்பு. இதையொட்டி, சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்தல் பற்றி ஈபிஎஸ் அணி.ஆலோசித்தது
அதன்படி, விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது என்றும் அதில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் ஒரு பொதுக்குழுவையும் கூட்டுவது என்றும் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, ஓபிஎஸ் படங்களுடன் கூடிய உறுப்பினர் அட்டைகளுக்குப் பதிலாக புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் அதிமுக உறுப்பினர் அட்டைகளிலும் ஓபிஎஸ் படத்தை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் படம் இன்றி, லட்சக்கணக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டு கட்சி அலுவலகத்தில் 2 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட வாரியாக அட்டைகள் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுக்கு முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் பேரில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் அதிமுகவின் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச்செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், துரைதன்ராஜ், வழக்கறிஞர் திருப்பதி, மாணவரணி மகேந்திரபாண்டி, ஒன்றியச்செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மணிமாறன், ஜெயராமன், ராமநாதன், பாண்டி, செந்தாமரை, கண்ணன், சந்திரபோஸ், தென்கரை நாகமணி, கோட்டைமேடு பாலா உள்பட வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu