சோழவந்தான் அருகே தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

சோழவந்தான் அருகே தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
X

சோழவந்தானில்  தீயணைப்புத்துறையினர் நடத்திய பேரிடர் மீட்பு ஒத்திகை

சோழவந்தான் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உள்பட்ட தாழ்வான தென்கரை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில ஒத்திகை நடத்தப்படது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் கால மீட்பு பணி ஒத்திகை நடத்தப்பட்டது.

சோழவந்தான் தீயணைப்பு நிலைய படைவீரர் சார்பாக வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. தீயணைப்பு துறையின் மாவட்ட அலுவலர் உத்தரவுப்படி, சோழவந்தான் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உள்பட்ட தாழ்வான தென்கரை பகுதியில், நிலைய அலுவலர் பழனிமுத்து தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு மழை வெள்ள அபாய காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்தினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது