ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்: மாநிலத்தலைவர் அறிவிப்பு

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 06.04.2023 - அன்று தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்: மாநிலத்தலைவர் அறிவிப்பு
X

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்னா போராட்டம் நடத்தப்படுமென மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்பு 06.04.2023. வியாழக்கிழமை அன்று ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.இதில், மாநில துணைத்தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் மற்றும் தர்மபுரி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

கோரிக்கைகள்: இதில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு நெடுநாளாக வெளியிடப் படாமல் கிடப்பில் உள்ள பணி விதிகள் அரசாணையை உடனே வெளியிட வேண்டும். ஊராட்சி செயலரின் மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும். தேர்வுநிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல், காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும். அரசு பணியாளர்களுக்குரிய ,அனைத்து சலுகைகளையும் வழங்குதல் மற்றும் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும்.

கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வளவு இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இவர்களின் வாழ்வாதாரத்தை இன்று வரை மேம்படவே இல்லை. உயர்ந்துள்ள விலைவாசியில், இவர்கள் தற்போது பெற்று வரும் தொகுப்பு ஊதியம் மிகவும் சொற்பமான தொகையாகும். எனவே ,மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 15,000 கால முறை ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

மற்றும் ஓய்வு பெறும் பொழுது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூபாய் 2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூபாய் 5000 அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மாதம் 10000 தொகுப்பு ஊதியம் ,ஊராட்சி மூலம் நேரடியாக வாங்க வேண்டும்.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச கால முறை ஊதியமாக ஊராட்சியில், ரூ.15000ஐ. அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் .

ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக வேலை நேரம் தாண்டி பணி செய்ய நிர்பந்தத்தில் இரவு நேரங்களில் சனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் ஆகியவற்றை ஆய்வு கூட்டங்கள் நடத்துதல் அவசரப் பணி என்று சொல்லி கால நேரம் வழங்காமல் உடனே செய்ய வேண்டும் நிர்பந்தித்து, நெருக்கடி நிலையை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு அரசாணைப்படி உடனடியாக தேர்வு நடத்தி அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

வட்டார ,மாவட்ட சுகாதார உரிமையாளர் 18 ஆண்டுகால பனிக்காலத்தை கருத்தில் கொண்டு இடைக்காலமாக ரூபாய் 25000 மாத ஊதியம் நிர்ணயிக்கவும், இவர்களின் வயது மற்றும் குடும்ப சூழ்நிலையை கருவியும் பணி காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

உதவி இயக்குனர் நிலையிலான பணியிடத்திற்கு தேர்ந்தோர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் முன்கல பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர், மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு, தமிழக முதல்வரால், அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15.000 இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனே வழங்கிட வேண்டும். மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் கணினி உதவியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நெடுங்காலமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

900க்கும் மேற்பட்ட ஓவர் சியர்கள், பிஇ, பிடெக், முடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஓவர்சியர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நான்காண்டுகள் முடிந்தவுடன் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

எனவே, தற்போது உள்ள காலியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான ஒவர்சியர்களை உதவி பொறியாளர்களாக நியமனம் செய்து, முடிக்கும் வரை புதிய அரசாணை நிறுத்தி வைத்திட வேண்டும். உதவி பொறியாளர் நிலையிலிருந்து உதவி செயற்பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு பெறாமல் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக உதவி பொறியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

எனவே, தற்போது காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர்கள் காலி பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 06.04.2023.- அன்று தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது.

தர்ணா போராட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சேலம் முருகன், மாநில பொருளாளர் ராம்நாடு ரவி, மாநில மகளிர் அணி செயலாளர் ராம்நாடு செந்தாமரை,, மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடி வேல்முருகன், மாநில பொருளாளர் சேலம் மகேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் கடலூர் விஜயபாலன், மாநில பொருளாளர் தூத்துக்குடி சங்கர், மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணகிரி செங்கதிர் செல்வன், உட்பட சங்க நிர்வாகிகள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 28 March 2023 1:00 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...