சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள்

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள்
X

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணியின் ஒரு பகுதியாக புகை மருந்து தெளிக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் ,வாடிப்பட்டி ஒன்றியம், தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு ஊராட்சியில் உள்ள வார்டுகள் அனைத்திலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், ஊராட்சி செயலாளர் முனியராஜ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன் சதீஷ் நடவடிக்கை மேற்கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம், அக்ரஹாரம், குருவித்துறை மெயின் ரோடு, ஊத்துக்குளி மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன முறையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

ஆனால், அதே வேளையில், மதுரை மாநகராட்சி உள்ளடக்கிய பல பகுதிகளில், பாதாள சாக்கடை பணிக்காக, மதுரை அண்ணாநகர், கோமதிபுரம் வீரவாஞ்சி தெரு, ராஜாராமன் தெரு, அன்புமலர் தெரு, சௌபாக்ய விநாயகர் கோயில் தெரு, காதர் மைதீன் தெருக்களில் , கழிவு நீர் கால்வாய் மூடிகள் உடைந்தும், கழிவு நீர் குழாய்கள் உடைந்து தெருக்களில், மழைநீருடன், கழிவு நீர் கலந்து நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், நகர் நல அலுவலர் உடனடியாக பார்வையிட்டு, கழிவு கால்வாய் உடைப்புகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story