மத்திய அரசைக் கண்டித்து, அலங்காநல்லூரில் கம்யூ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அலங்காநல்லூரில் கம்யூ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து, அலங்காநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசைக் கண்டித்து, அலங்காநல்லூரில் கம்யூ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே, அலங்காநல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி, அலங்காநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,

மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று மனு கொடுக்கப்பட்டது . இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!