சோழவந்தானில் தென்னை விவசாயிகள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

சோழவந்தானில் தென்னை விவசாயிகள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
X

சோழவந்தானில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சோழவந்தானில் தென்னை விவசாயிகள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகே திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெருவில் தென்னை விவசாயிகள் சார்பாக மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளை பாதுகாத்திட வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். மாவட்டக்குழு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விஜய முருகன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்டத் தலைவர் வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாக ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வதற்கும், ஒவ்வொரு தென்னை மரத்திற்கு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பீடு செய்யவும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடாக 10,000 வழங்கிடவும் கோரிக்கை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றியக்குழு கந்தவேல் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai healthcare products