குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர்கள் தரிசனம்

குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர்கள்  தரிசனம்
X

சோழவந்தான் குருவித்துறை  குருபகவான்கோயிலில் தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார்

குருவித்துறை குருபகவான் கோவிலில், முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, ஆர். பி. உதயகுமார் சாமி தரிசனம் செய்தனர்

குருவித்துறை குருபகவான் கோவிலில், முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, ஆர். பி. உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர்

தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவில் உள்கட்சி தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இதில், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமை கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை வந்த முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு, வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீரன் சின்னமலை அவர்களின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு, அலங்காநல்லூரில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து, குரு பெயர்ச்சி தலமான சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் உள்ள குரு பகவானை வழிபட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்பு ,திருமங்கலம் அருகே அம்மா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர்கொரியர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் ,மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி, பேரூர் கழக செயலாளர் சோழவந்தான் முருகேசன், அலங்காநல்லூர் அழகுராஜா, பாலமேடு குமார், வாடிப்பட்டி நிர்வாகி சோனை, ராஜேஸ்கண்ணா, அசோக் நிர்வாகிகள் மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்.

ஒன்றிய மகளிரணி செயலாளர் குருவித்துறை வனிதா , ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, தென்கரை இராமலிங்கம், நாச்சிகுளம் தங்கபாண்டி ,மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ,கருப்பட்டி செந்தில், மன்னாடி மங்கலம் தெற்கு கிளைச்செயலாளர் ராஜபாண்டி, விவசாய அணி கந்தன், கச்சிராயிருப்பு முனியாண்டி, ராமர், திருவேடகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி ,சங்கையா, அசோக், வணங்காமுடி, தியாகு சூர்யா,

பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முகசுந்தரம், சரண்யா கண்ணன், விவசாய.அணி வேலுச்சாமி, வாவிடமருதூர் குமார், குமாரம்பாலன், கல்லனை சின்னப்பாண்டி, வாவிடமருதூர் ஊராட்சிமன்ற தலைவர் திருநாவுக்கரசு, வாடிப்பட்டி மணிமாறன், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி, மேலக்கால் மேற்கு கிளை செயலாளர் காசிலிங்கம், உள்படஅதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story