சோழவந்தான் அருகே குருபகவான் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் தரிசனம்

சோழவந்தான் அருகே குருபகவான் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் தரிசனம்
X

குருவித்துறை குருபகவான் கோயிலில்,  முன்னாள் அமைச்சர் உதயக்குமார் சுவாமி தரிசனம் செய்தார்

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சாமி தரிசனம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் உள்ளது. குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி லட்சார்ச்சணை, பரிகார மகாயாகம் பூர்ணாஹூதி நடைபெற்று புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு குரு பகவான் அருள் பாலித்தார். குரு பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.

அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், குருவித்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சண்முகா பாண்டியர் ராஜா, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி குருவித்துறை பாபு, கூட்டுறவு சங்க தலைவர் கண்ணுசாமி வழக்கறிஞர் காசிநாதன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல, மதுரை அருகே அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.மதுரை அருகே மேலமடை, தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர், சித்தி விநாயகர், யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், குருப்பெயர்ச்சியையொட்டியை ஒட்டி, குரு ப்ரீதி ஹோமங்கள் , நவகிரக ஹோமங்கள் நடைபெற்றது.பக்தர்கள், பலர் குரு பகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை ஆலயநிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags

Next Story